ஒழுக்கம் அடிமைத்தனமா?
இன்று பெரும்பாலான் இளைஞர்கள் புலன் கவர்ச்சியினாலும், கட்டுப்பாடற்ற சுதந்திரத்தாலும், பெற்றோரின் கண்கானிப்பு குறைபாடாலும் பாதை தவறி எதில் இன்பமில்லையே அதையே இன்பமென்று நினைத்து லயித்துக்கொண்டிருக்கின்றனர். இது இளைஞர்களின் செயல்திறனை பாதிப்பதுடன் நீண்ட கால நோக்கில் பெரும் மனவீழ்ச்சிக்குதான் வழி வகுக்கும்.
ஒழுக்கம் ஒருமனிதனை தலையை தாழ்த்தச்செய்கிறது அதே நேரத்தில் மனதை நிமிரச்செய்து தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இதனால் நிச்சயம் ஒவ்வொருவருடைய செயல்திறனும் மேம்படும் எனபது நிச்சயம். பூரண, அள்ள அள்ள குறையாத பேரின்பத்தை ஒழுக்கத்தினாலேமட்டுமே பெறமுடியும். உதாரணமாக நாம் திரைப்படம் சென்றால் நமக்கு அந்த காட்சிகளை க்ண்டுகளிக்கும்வரை மகி்ழ்ச்சியும், திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இனம்புரியாத மன பாரமும் ஏற்படும். இதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன். இதுதான் சிற்றின்பம் என்பதற்கான அடையாளம். அந்த இன்பத்தினால் நாம் பேரின்பத்தை அடையமுடியாது என்பதற்கான அறிகுறி. இவற்றை நாம் சிறிது சிறிதாக நம்மை நாமே பழக்குவதன்மூலம் விட்டொழிக்கலாம். அதனால் ஒழுக்கம் அதிகரித்து மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து தனக்கும் சமுதாயத்திற்கும் ஒருவரால் பயனுள்ள முறையில் வாழ முடியும்.
மற்றபடி இன்றைய இளைஞர்கள் நினைப்பதுபோல் இது ஒன்றும் அடிமைத்தனமல்ல.
No comments:
Post a Comment