Showing posts with label ஆலயம். Show all posts
Showing posts with label ஆலயம். Show all posts

Friday, October 5, 2007

ஆலயம் - சொல் விளக்கம்

ஆலயமென்றால் அறிவு ஓர்மை நிலை பெற்று
ஆன்மாவெனும் உயிரில் அடக்கமுறும் பேறாம்.
ஆலயமெனும் சொல்லில் 'ஆ' ஆன்மாவாகும்
அடுத்துவரும் 'லயம்' அதனின் அட்க்க நிலைக் குறிப்பு
ஆலயமாம் பயிற்சி முறை தேர்ந்தாற்றிப் பழக
அறிவு உயிரை உணரும் மெய்ப் பொருளாம்
ஆலயத்தால் மனிதன் அறவழி கண்டு வாழ்வான்
அதற்கறிவின் தரமொக்க இருவழிகள் உண்டு.

Saturday, September 29, 2007

கற்பகம்

கற்பு + அகம் என்ற சொற்களின் இணைப்புத்தான் கற்பகம்.இங்கு ஆன்மா உயிர்வரையில் உணர்ந்து விரிந்து ஆற்றுகின்ற தகுதி பெற்ற நிலை. இச்சித்து இச்சித்து, துய்த்துத் துய்த்து சலிப்பும், துன்பமும் பெற்ற ஆன்மா சிந்தனையில் ஆழ்கின்றது. புற இயக்கம் விடுத்து தன்னடக்கம் உண்டாகி உயிர் நிலையின் சிறப்பை அறிகின்றது. அறிவைப் படர்க்கை ஆற்றலாகவே அறிந்து கொள்கிறது. விளைவறிந்து செயலாற்றுகின்ற தகைமை ஓங்குகிறது. செய்யத்தக்கன, தகாதன இவற்றை விளங்கி, விளக்க வழியில் தன் தேவை,பழக்கம் இவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளுகிறது. இந்த அளவில் அறிவு உறுதி பெற்ற போது ஒழுங்கும் இயல்பாகின்றது. உறுதியும் ஒழுக்கமும் பெற்ர ஆன்மாவின் அந்த மதிப்புள்ள உயர்நிலை தான் கற்பு + அகம். அகம் என்றால் உள்ளம். கற்பு எனில் உறுதியும் ஒழுக்கமும் பெற்ற நிலை. இது ஆன்மாவின் வளர்ச்சி நிலையில் இரண்டாவது கட்டம்.

காமதேனு

தேனு என்பது பசு. ஆன்மீக உலகில் பசு என்கிற சொல் ஆன்மாவை குறிக்கும். காமம் என்பது இச்சையைக் குறிக்கும் சொல். காமதேனு எனில் இச்சையை இயல்பாக உடைய ஆன்மா என்று பொருள். உடல் வரையில் எல்லை கட்டி புலன்கள் வழியே புறப்பொருள் கவர்ச்சியால் ஈர்க்கப்பெற்று ஆன்மா செயல் புரிகின்ற போது விளைவுகள் பெரும்பாலும் சலிப்பும் துன்பமும் தரும். இவ்வகையில் இச்சைக்கே ஆன்மாவின் ஆற்றல் பயன்படுகின்ற முதல் கட்டம் காமதேனு.

Saturday, April 7, 2007

சித்தர்கள்

சித்தர்களும், ஜீவ சமாதிகளும்

திருமூலர் - சிதம்பரம்
போகர் - பழனி
கருவூரார் - கருவூர்
புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்
கொங்கனவர் - திருப்பதி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
வல்லபசித்தர் - மதுரை
சட்டைமுனி - திருவரங்கம்
அகத்தியர் - கும்பேஸ்வரர் கோயில்
தேரையர் - தோரணமலை
கோரக்கர் - பேரூர், வடக்கு பொய்கைநல்லூர்
பாம்பாட்டி - மருதமலை, துவாரகை
சிவவாக்கியர் - கும்பகோணம்
காகபுஜண்டர் - திருச்சி
இடைக்காட்டார் - திருவண்ணாமலை
பதஞ்சலி - சிதம்பரம்
புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோயில்
கடுவெளிசித்தர் - திருக்காஞ்சிபுரம்
காலாங்கிநாதர் - திருக்கடவூர்
அகப்பை சித்தர் - எட்டுக்குடி
பட்டினத்தார் - திருவொற்றியூர்
வள்ளலார் - வடலூர்
அழுகன்னி சித்தர் - நாகப்பட்டினம்