சித்தர்கள்
சித்தர்களும், ஜீவ சமாதிகளும்
திருமூலர் - சிதம்பரம்
போகர் - பழனி
கருவூரார் - கருவூர்
புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்
கொங்கனவர் - திருப்பதி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
வல்லபசித்தர் - மதுரை
சட்டைமுனி - திருவரங்கம்
அகத்தியர் - கும்பேஸ்வரர் கோயில்
தேரையர் - தோரணமலை
கோரக்கர் - பேரூர், வடக்கு பொய்கைநல்லூர்
பாம்பாட்டி - மருதமலை, துவாரகை
சிவவாக்கியர் - கும்பகோணம்
காகபுஜண்டர் - திருச்சி
இடைக்காட்டார் - திருவண்ணாமலை
பதஞ்சலி - சிதம்பரம்
புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோயில்
கடுவெளிசித்தர் - திருக்காஞ்சிபுரம்
காலாங்கிநாதர் - திருக்கடவூர்
அகப்பை சித்தர் - எட்டுக்குடி
பட்டினத்தார் - திருவொற்றியூர்
வள்ளலார் - வடலூர்
அழுகன்னி சித்தர் - நாகப்பட்டினம்
14 comments:
அகத்தியர் :
பொதியமலை அகத்திய மாமுனி சித்த மருத்துவத்துக்கு ஈடில்லா தொண்டாற்றியுள்ளார். சமரச் நிலை ஞானம், அகத்தியர் 5 சாஸ்திரங்கள்,
அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்தியக்குப்பி, செந்தூரம் 300,வைத்திய ரத்னாகரம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியம் 1500,
வைத்தியம் 4600 உள்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.
அகத்திய சித்தருக்கு பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரை பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை வஸ்திரம் அணிவித்து புதன் கிழமை
பூஜை செய்யலாம்.
திருமூலர் :
சித்தர்களில் சிறப்பிடம் பெற்றவர் திருமூலர். சிவபெருமான் நந்தீசரிடம் உபதேசம் பெற்றவர். அஷ்டமாசித்து நிரம்ப பெற்றவர். திருமந்திரம்
நூலில் சிவபெருமானையும் சைவ திருமறையையும் போற்றி 3 ஆயிரம் பாடல்கள் ஆண்டுக்கு ஒரு பாடல் என்கிற விகிதத்தில் பாடியவர்.
திருமூலர் காவியம் 8000, திருமூலர் சோதிடம் 300, திருமூலர் சல்லியம் 1000, திருமூலர் பெருங்காவியம் 1500, திருமூலர் விதிநூல்
24, திருமூலர் தீட்சை விதி 18, திருமூலர் பெருநூல் போன்ற நூல்களை படைத்துள்ளார்.
போகர்
சீன தேசத்தவர் என்று அகத்தியர் கூறுகின்றார். பாலதண்டாயுதபானி சிலையை நவ பாஷானக்கட்டில் தயாரித்தார். போக முனிவர் தமிழ் சீன
ழியில் நூல்கள் எழுதியுள்ளார். போகர் 12000, சப்த காண்டம் 7000, போகர் கற்பம் 360, போகர் வைத்திய சூத்திரம் 77, போகர் ஞான
சாராம்சம் 100 ஆகியவை முக்கியமானவை.
பழனிமலை முருகர் சிலையை தழுவி வந்த பஞ்சாமிருதத்தையே போகர் உணவாக உண்டார். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை
உருவாக்கியவரும் இவரே என்றும் சிலர் கூறுவதுண்டு. நவகிரகத்தில் செவ்வாய் கிரகத்தை இவர் பிரதிபலிப்பதால் இவரை வணங்கிவந்தாலே
தோஷம் நீங்கும்.
புலிப்பாணி சித்தர்:
இவர் போகரின் சீடராவார், குருநாதர் தண்ணீர் கேட்டத்ற்காக காட்டு புலியை வசியப்படுத்தி வெறும் கையாலே தண்ணீர் திரட்டி கொண்டு வந்தார்.
பழனிமலை பால தண்டாயுதபாணி சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர். புலிப்பாணி பரம்பரை இன்றும் பழனி போகர்
சமாதிக்கு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவரை 108 முறை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி சொத்து தகராறு நீங்கும்.
புலிப்பாணி சித்தரை சிவப்பு வஸ்திரம் சாத்தி பூஜித்தால் நல்லது.
பாம்பாட்டி சித்தர்:
பாம்பை பிடிப்பது, அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது இதுவே இவரது தொழில். விஷ முறிவு மூலிகைகளை அறிந்த சித்த வைத்தியராக
இருந்திருக்கிறார். இவர் நவக்ரகங்களில் ராகுபகவானை பிரதிபலிப்பதால் இவரை வழிபட நாக தோஷம் அகலும். சனிக்கிழமை அன்று கருப்பு
வஸ்திரம் அணிவித்து, அல்லி, தாமரை, தாழம்பூ, சம்பங்கி ஆகிய புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய, கணவன் மனைவி தாம்பத்திய
பிரச்சினைகள், போதைப்பழக்கம், நாகதொஷம், களத்திர தோஷம் நீங்கும், வீண் பயம், நரம்பு கோளாறுகள் நீங்கும்.
காலங்கி நாதர்:
சுக்கிரனை இவர் பிரதிபலிப்பதால் ஜாதகத்தில் உள்ள சுக்கிரதோஷத்தை போக்குவார். வெள்ளிக்கிழமை இவரை வழிபடுவதால் களத்திரதோஷம்,
திருமணத்தடை, கணவன் - மனைவி, மாமியார்-மருமகள் பிரச்சனைகள் தீரும்.
கருவூரார்
சோழநாட்டின் கருவூரில் பிறந்தவர். பல்வேறு சித்துகளையும், ஞான நூல்களையும் கற்றவர். இவர் நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவானை
பிரதிபலிப்பதால் சனி தோஷம் நீங்கும். அஷ்டமசனி, ஏழரைசனி, கண்டச்சனி நீங்கும்.பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.சனிக்கிழமைகளில்
கருநீல வஸ்திரம் அணிவித்து வழிபடவும். நிவேதனமாக பச்சைக்கற்பூரம் போட்ட சர்க்கரை பொங்கலை வைக்கவேண்டும்.
சிவவாக்கியர்:
பிறக்கும்போதே சிவ சிவ என்று சொல்லிக்கொண்டு பிறந்ததால் சிவ வாக்கியர் எனப்பெயர் பெற்றார். இவரால் இயற்றப்பட்ட பாடல் சிவ
வாக்கியம். சிவ என்னும் சொல்லை இவர் பாடல்களில் அதிகமாக கையாண்டுள்ளார். ராம ஜெபமும் இவர் பாடல்களில் உண்டு. சந்திர
கிரகத்தை பிரதிபலிப்பதால் ஜாதகத்திலுள்ள சந்திர தோஷங்களை நீக்குபவர். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து திங்கள் கிழமையில்
பூஜிப்பது விசேஷித்த பலனைக்கொடுக்கும்.
மனவியாதி, மன அழுத்தம், மனசஞ்சலம், படிப்பிலும் தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமை போன்ற மனக்குழப்பங்களை நீக்குவார். ஓம்
ஸ்ரீசிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி 108 முறை தியானித்து வணங்கினால் மனவியாதி தீரும்.
பின்னாக்கீசர்
பின்னாக்கீசர் சென்னிமலை சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய குகைக்கும், போகர் சமாதிக்கும் சுரங்கப்பாதை இருப்பதாகவும்,
ஆங்கிலேயர் காலத்தில் சுவர் எழுப்பி யாரும் செல்லாமல் தடுத்துவிட்டனர் என்றும் கூறுகின்றனர்.
இவர் நவகிரகங்களில் சுக்கிரனை பிரதிபலிப்பதால் வெள்ளிக்கிழமையில் இவரை முறைப்படி வழிபட்டால் சுக்கிர தொஷம் விலகும். பழிபாவம்,
பிரச்சினை விலகிவிடும்.
காகபுஜண்டர்
காகபுஜண்டர் காக்கை உருவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தவர். இவர் குரு பகவானை பிரதிபலிப்பதால் குரு
தொடர்பான சாப தொஷங்கள் விலக்குவார்.
பணப்பிரச்சனை, புத்திரபாக்கியக்கோளாறு, அரசாங்க பிரச்சினைகள், வியாபார நஷ்டம், வறுமை, வயிறு, குடல் சம்மந்தப்பட்ட கோளாறு
நீங்கி பெரியோர் சாபம், பெரியோர் பழி, குருவை நிந்தித்த பழி பாவம் தீர இவரை வியாழன் அன்று மஞ்சள் வஸ்திரம் சாத்தி நீலசங்கு,
தவனம், மரு ஆகிய புஷ்பங்களில் முறைப்படி அர்ச்சனை செய்ய நலம் கிடைக்கும்.
உங்கள் பட்டியல்...18 சித்தருக்கும் அதிகமாக இருக்கிறது.
:)
புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர் -
இவர் ஒரு சீனராம்.
சித்தர்களில் பெண்சித்தர்களும் இருக்கிறார்கள். சரியான பெயர் தெரியவில்லை. பிறகு தெரிவிக்கிறேன்.
"அழுகன்னி சித்தர் - நாகப்பட்டினம்"
இப்படி ஒருவரா? கேள்விப்பட்டதே இல்லை.
கண்ணன் ஐயா,
இதற்கு காரணம் நம்மூரில் கிடைக்கும் சித்தர்களின் பட்டியல் இருவகையாக இருப்பதுதான்.
'கௌதமர், அகத்தியர், சங்கரர், வைரவர், மார்க்கண்டர், வன்மிகர், உரோமர், புசண்டர், சட்டைமுனி, நந்தீசர், திருமூலர், பாலாங்கிநாதர், மச்சமுனி, புலத்தியர், கருவூரார், கொங்கணர், போகர், புலிப்பாணி _ என்பது ஒரு வரிசை.
'திருமூலர், ராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, போகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிசித்தர், சட்டைமுனி, சுந்தரானந்தர், குதம்பையார், கோரக்கர் என்று ஒரு வரிசை.
இப்படிப் பதினெட்டு சித்தர்கள் வரிசையை ஆன்மிக உலகம் பலப்பல மாதிரிகளில் வைத்திருக்கிறது. ஏன் இந்த மாறுபாடு என்று தெரியவில்லை.
என் வரையில் , பதினெண்மருக்கும் மேல் , நூற்றுக்கணக்கில் சித்த புருஷர்கள் இருக்கின்றனர்.
அதனால் எனக்கு தெரிந்த விவரங்களை இங்கே தொகுக்க எண்ணியே கிடைத்த விவரங்களை பதிந்துள்ளேன்.
வாழ்க வளமுடன்.
Post a Comment