Monday, April 23, 2007

வேதாத்ரியம்

வாழ்த்து வீண் ஆகாது வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
என்று சொல்லச் சொல்ல உடல், மனம் நன்றாக இருக்கும்.

38 comments:

அக்னி சிறகு said...

அகந்தை உறவுகளை முறிக்கும்
அன்பு உறவுகளை வளர்க்கும்.

அக்னி சிறகு said...

வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். - வாழ்க வளமுடன்

அக்னி சிறகு said...

மனம் + இதன் = மனிதன். இதம் என்றால் அன்பும் கருணையுமாக
ஒத்தும் உதவியும் இருப்பது என்று பொருள்

அக்னி சிறகு said...

உலகில் உள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா
உயிர்களிலும் சிறந்த மேலான ஓர் இயக்க நிலை மனித உருவம்.

அக்னி சிறகு said...

எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக
எடுத்துக்காட்டும் பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே

அக்னி சிறகு said...

உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள்
அருட்பேராற்றலின் இயற்கை மெய்ப்பொருள்

அக்னி சிறகு said...

கருவுற்ற பெண்ணுடைய மனதை சோர்வு, பிணக்கு வருத்தம்
அடையச்செய்வோமானால் அது குழந்தையின் மனதைப்பாதிக்கும்.

அக்னி சிறகு said...

எந்த ஒன்று இன்பத்தை தருகின்றதோ,
அதுவேதான் துன்பத்தையும் தருகி்றது.

அக்னி சிறகு said...

உலகிலேயே மிக உயர்ந்த பிறப்பு
இந்த மனிதப்பிறப்பு கிடைத்தற்கரிய பிறப்பு

அக்னி சிறகு said...

துன்பத்தையே நினைப்பதும், குறைவை நினைப்பதும்
ஓர் ஏழ்மை அறிவினுடைய வறுமையேயாகும்.

அக்னி சிறகு said...

மனிதனுக்கு 4 உணர்வுகள்
இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவை.

அக்னி சிறகு said...

மனதிற்கு பொறுக்க முடியாத தன்மை உள்ளதோ?
அதைத் துன்பம் என்று சொல்லலாம்.

அக்னி சிறகு said...

குழந்தை வளர்க்கும் சமயத்தில் குடும்பத்தில் பெரியோர்களின்
அனுபவங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அக்னி சிறகு said...

சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கிவிடப்பட்ட
உணர்ச்சிகளும் இன்பம் என்று சொல்லலாம்.

அக்னி சிறகு said...

இன்பமும் இல்லை துன்பமும் இல்லை
என்றால் அதுதான் அமைதி

அக்னி சிறகு said...

கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும்
அதன் அறிவாக குடிகொண்டிருக்கிறார்

அக்னி சிறகு said...

கவலைப்படுவதால் அறிவாற்றல் வீணாகும்.
உடல் நலம் குறையும்.

அக்னி சிறகு said...

ஒவ்வொருவரும் கணவன், மனைவி உறவை உயிர்க்கும்
மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும்

அக்னி சிறகு said...

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும்
உயிரைவிட மேலாக போற்றப்பட வேண்டிய ஒழுக்கம்.

அக்னி சிறகு said...

ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய
உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்ப அமையும்.

அக்னி சிறகு said...

கவலைப்படுவதால் அறிவாற்றல் வீணாகும்.
உடல் நலம் குறையும்.

அக்னி சிறகு said...

பெண் வயிற்றில் உருவாகிப் பின்னுமந்த
பெண் கொடுத்த பால் உண்டே வளர்கிறோம்.

அக்னி சிறகு said...

பெண் துணையால் வாழுகின்ற பெருமை கண்டு
பெண்மையிடம் பெருமதிப்பு அறிஞர் கொள்வர்.

அக்னி சிறகு said...

ஆறாவது அறிவை கொண்ட இந்த மனிதன்
வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெறவேண்டும்.

அக்னி சிறகு said...

புலன் என்பது அறிவு
மெய் என்பது ஞானம்

அக்னி சிறகு said...

அறிவு எனப்படுவது அறியப்படுவது
ஞானம் என்பது உணரப்படுவது

அக்னி சிறகு said...

அறிவை ஏடுகளில் பெறலாம்
ஞானத்தை தவத்தால் பெறலாம்

அக்னி சிறகு said...

அறிவு அழிவுக்கு துணை போகும்
ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்

அக்னி சிறகு said...

அறிவாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்
ஞானியர்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள்

அக்னி சிறகு said...

குழந்தைகளின் மனதில் நம்பிக்கையை
செதுக்குகிற சிற்பிகள்தான் பெற்றோர்கள்.

அக்னி சிறகு said...

கடவுள் + ஆனவம், கனமம், மாயை = மனிதன்
மனிதன் - ஆனவம், கனமம், மாயை = கடவுள்

அக்னி சிறகு said...

செயல் புரிபவன் மனிதன்
செயல் விளைவாக மலர்வது இறைநிலை

அக்னி சிறகு said...

நன்மை செய்பவனுக்கு இறைவன் தரும் வரம் இன்பம்
செயல் தவறு என்பதை இறைவன் உணர்த்தும் வழியே துன்பம்

அக்னி சிறகு said...

விளைவறிந்த விழிப்போடு துன்பம் வராமல்
காக்கும் செயல் முறையே அறமாகும்.

அக்னி சிறகு said...

செயலின் விலைவாக சிவனைக்
காணும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.

அக்னி சிறகு said...

இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும் கருணையும்தான்
எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம்.

அக்னி சிறகு said...

பிறர் குற்றத்தை பெரிது படுத்தாமையும்
பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

அக்னி சிறகு said...

அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனத்தாலோ
தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது.