சைவம், அசைவம் - எது சிறந்தது?
இதற்கு ஜீவன்களின் கருமையம் பற்றிய விளக்கம் பெற்றிருத்தல் தகுதியாகும். கருமையம் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் உடலின் மையத்தில் அமைந்திருக்கும். இது கணினியின் Hard Disk - ஐ போன்றது. அதுபோலவே பணிபுரியவும் செய்யும். அதன் வெளியீடே ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்பாலுக்கு விந்தணுவாகவும், பெண்பாலுக்கு முட்டையாகவும் வெளிப்படும். இவை இணைந்தே இன்னொரு உயிர் தோன்றும். இதன் பதிவுகளுடன் கூடிய வெளியீட்டினை நவீன மருத்துவம் ஜீன்கள் என்றழைக்கிறது.
அப்படிப்பட்ட மகத்தான சக்தி படைத்த கருமையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், துய்க்கும் ஒவ்வொரு செயலும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. எப்படி ஒரு மாட்டினை பார்த்தபார்வையில் அது மனதில் பதிந்து எவரேனும் மாடு என்ற உடன் அது விரைவாக மனதில் உருவம் பெறக்கூடிய அதிசயம் நடக்கிறது? சிந்திப்பீர். உங்கள் ஒவ்வொரு அனுபவமும் அலை வடிவத்தில் மாற்றம்பெற்று சுருக்கம்பெற்று கருமையத்தில் பதிந்து நீங்கள் நினைக்கும்நொடியில் அது உருவமும் அல்லது அந்த அனுபவம் அதே தன்மைகளுடன் உங்களுக்கு உள்ளுணர்வாக மலரும்.
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஆடு, மாடு, கோழி போன்ற உயிரிணங்களுக்கும் 5 உணர்வுகள் உண்டு. அவை அனைத்தையும் கருமையத்தில் சேமித்துக்கொண்டே வரும். பலியிடப்படும் உயிரின் கடைசி மரண உணர்வுகளும் கருமையத்தில் பதிவாகும். அதே வேகத்தில் அதன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பதிவாகும். நீங்கள் அந்த உணர்வுள்ள உயிரிணத்தினை புசிக்கும்போது அந்த பதிவுகள் நீக்கம் பெற்றிருக்காது. ஏனெனில் அனைத்தும் அலைவடிவிலேயே இருக்கும். அதன் காரணமாக அவற்றின் பதிவுகள் உங்களுள்ளும் இறங்கி பாவப்பதிவாக உங்கள் கருமையத்திலும் பதிவாகும்.
இப்பொழுது புரிகிறதா பெரியவர்களின் பொன்மொழி கொன்றால் பாவம் தின்றால் போச்சு (உங்கள் கருமையத்திற்குள் போச்சு).
ஆனால் மரம் செடி கொடிகளும் உயிர்னம்தானே என்று சிந்திக்கலாம்.மரத்தின் கருமையம் வேராக இருக்கிறது. நீங்கள் காய்கனிகளை பறிக்கும்போது அந்த மரத்தின் வேதனையானது கருமையத்தில் இறங்கும். அதுவும் பூமியோடு தொடர்புகொண்டிருப்பதால் உடனடியாக பூமிக்கு கடத்தப்படும்(எர்தாகிவிடும்). கீரையை வேரோடு பிடுங்கும்போதும் அது தன் உணர்வுகளை உடனடியாக பூமிக்கு கடத்திவிடுகிறது. எனவே சைவ உணவு வகைகளின் உணர்வுகள் பூமிக்கு கடத்தப்படுவதால் பாவ பதிவுகள் அதை சுவைப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. பூமியும் ஒரு உணர்வற்ற பொருள் என்பதால் அந்த துன்ப அலைக்கு மதிப்பு நடுநிலைப்படுத்தப்படுகிறது.
இதுதான் சைவ உணவை நம் நாட்டு அறிவியலறிஞர்கள் வேதங்களில் எழுதியும், நம் வாழ்க்கை கலாச்சாரத்தில் மறைமுகமாக புகுத்தியும் வைத்திருப்பதன் காரணமாகும். காலப்போக்கில் பல்வேறு அந்நிய படையெடுப்புகள் மற்றும் நாகரீக சிந்தனை என்கிற பெயரில் புறப்பட்டவர்களின் பிரசாரங்களாலும் இந்த காரணம் நம்மிடமிருந்து காணாமல் போய்விட்டது.
மரத்தின் கருமையம் விதைகளில் இருக்கிறதே என்று சந்தேகம் தோன்றலாம். விதைகளில் மரத்தின் கருமையம் இருப்பின் மரம் விதை நீக்கம் பெற்ற உடன் மரணித்துவிடும். அதே நேரத்தில் ஒரு உயிரிணத்திற்கு ஒரு கருமையம் மட்டுமே இயற்கையில் அமையும்.
இதற்கு டெஸ்ட் ட்யூப் பேபி உதாரணம் மூலம் விளக்கமளிக்க முயல்க்கிறேன். ஆணின் கருமையம் விந்துவிலும், பெண்ணின் கருமையம் முட்டையிலும் இருப்பதாக கொண்டால் அவர்கள் விந்துவையும், முட்டையினையும் வெளியில் சோதனைக்குழாயில் இணைக்க மனித உடலிலிருந்து வெளியே எடுத்தால் உடனே மனிதன் இறந்துவிடுவான். ஆனால் ஏன் மரணிக்கவில்லை, மனிதனின்(ஆண் பெண் இருபாலரையும் குறிப்பதாக கொள்ளவும்) சாரமான விதையை மட்டுமே(அதாவது மனித ஜீன்களை - தன்மைகளை) உபயோகித்து சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்குகின்றனர். இதனால் மனிதன் மரணிப்பதில்லை. அதுபோலதான் விதைக்கும் வேருக்கும் உள்ள தொடர்பும் கருதப்படவேண்டும்.
16 comments:
"கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்பதற்கு மிக வித்தியாசமான விளக்கம் தந்திருக்ககீங்க பிரதாப்.
ஆனா பாருங்க, நாக்கு ருசிக்கு அடிமையாகிடறாதல இந்த பாவங்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட்டதில்லை :-(
"என் வயிறு ஒரு சுடுகாடு;நான் பல கொலைகளுக்கு காரணமாயிருக்கிறேன்"னு என் சின்ன வயதில் நான் எங்க அப்பாட்ட சொல்றதுண்டு.அதுக்கு அப்பா இந்த பழமொழியைச் சொல்லி சாப்பிட வச்சிடுவாங்க
கருமையம் பற்றிய இந்த விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.சைவம்தான் சிறந்ததுன்னு சொல்றீங்க. நானும் சுத்த சைவமா மாற முயற்சி பண்றேன் :-)
அப்புறம்,சித்தர்கள் பற்றிய பதிவுகள் நிறைய எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன் :-)
அன்பரே,
இந்த பதிவை படிப்பவர்கள் அனைவரும் இதனை உணரவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். மேலும், இது எனது கருத்தல்ல. அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் போதனையாகும். அவர் குறித்த விவரங்களை www.vethathiri.org என்கிற தளத்தில் காணலாம்.
நீங்கள் இதிலிருந்து உடனடியாக விடுபட முடியாதென்று நினைக்கிறேன். ஏனெனில் உங்கள் குடும்பத்தில் மற்றவரும் அசைவ உணவு பழக்கம் உள்ளவராயின் அவர்கள் பாசத்திற்காகவேனும் உண்ணும் கட்டாயத்திற்குள்ளாவீர்கள். அதனால் அவர்களுக்கும் இது குறித்த விவரங்களை தெரியப்படுத்தினால், அவர்களும் இதை உணர்ந்தால் இதிலிருந்து சுலபமாக மாறுவீர்கள். அவர்கள் உங்களுக்கும், அவர்களுக்கு நீங்களும் துணை நிற்பீர்கள்.
நீங்கள் இந்த பழக்கத்திலிருந்து விரைவில் மாற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.
ரொம்பவே அருமை, பிரதாப் அவர்களே!,விஞ்ஞான பூர்வமான விளக்கமும் அருமை. வாழ்த்துக்கள்.
திரு அக்னி சிறகு , அவர்களுக்கு , என் அன்பு வணக்கம்.........
உங்களது சைவம் , அசைவம் பற்றிய கட்டுரைகளை ,படித்தேன்...மிக அருமை...நானும் கடந்த ஒன்பது வருடங்களாக ,சைவ உணவை உட்கொண்டு வருகின்றேன்,தட் பொழுது மலேசியாவிலும், சிறிதே கடினம்... ஆனால் பால் மற்றும் பால் ,பொருட்களும் ,சைவமா ,அசைவமா....நானும் ஓர் வருடங்கள் விலக்கி இருந்தேன்... மீண்டும் உடல் சூட்டின் காரணமாக , மோர் , மற்றும் பால் பொருட்கள் சாப்பிட்டுகின்றேன்...தயவு செய்து விளக்கம் வேண்டும்
அன்புடன்
இரா . செந்தில் நாதன்
http://anbutan.blogspot.com/
பால் எப்படி உற்பத்தியாகிறது என்று பார்ப்போம். பால் பசு, கன்று ஈன்ற பிறகு உற்பத்தியாக தொடங்குகிறது. கன்று குடித்தது போக மீதிப்பால் தான் நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. வலுக்கட்டாயமாக எடுக்கப்படுவதில்லை. கருமையம் பற்றிய விளக்கத்தின்படி பசு பால் உற்பத்தி செய்யும்போது எந்த துன்ப உணர்வையும் அனுபவிப்பதில்லை. அதனால் பாலில் உள்ள செல்களில் எந்த துன்ப உணர்வும் இயற்கையில் கிடையாது. அதனால் பால் குடிப்பதால் நீங்கள் எந்த உணர்வையும் அல்லது காந்த அலையையும் பால் வழியாக பெறுவதில்லை.(சிலர் பால் பசுவின் ரத்தினால் ஆனது என்று கூட சொல்லலாம். குழப்பிக்கொள்ள வேண்டாம்.)
இதன்படி பால் சைவ உணவே. மோர், தயிர் எதுவேண்டுமானாலும் உணவாக கொள்ளலாம். குழப்பம் வேண்டாம்.
புரியற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.
//இதுதான் சைவ உணவை நம் நாட்டு அறிவியலறிஞர்கள் வேதங்களில் எழுதியும், நம் வாழ்க்கை கலாச்சாரத்தில் மறைமுகமாக புகுத்தியும் வைத்திருப்பதன் காரணமாகும். காலப்போக்கில் பல்வேறு அந்நிய படையெடுப்புகள் மற்றும் நாகரீக சிந்தனை என்கிற பெயரில் புறப்பட்டவர்களின் பிரசாரங்களாலும் இந்த காரணம் நம்மிடமிருந்து காணாமல் போய்விட்டது//
வெளிநாட்டுக்காரன் தான் அசைவம் பரவகாரணமென்பது தவறான வாதம். அசைவ உணவு உண்ணும் பழக்கம் முன்பு இல்லை என்றால் ஏன் புலால் மறுத்தல் பற்றி திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கப் போகிறார்.
http://govikannan.blogspot.com/2007/10/blog-post_01.html
திரு.கோவி.கண்ணன் புலால் உண்ணலின் விளைவுகளை அறிந்த முன்னோர் சைவ உணவின் அவசியத்தையே காரண காரியத்துடன் ஏற்படுத்திவிட்டு சென்றனர் என்றுதான் சொல்லியிருக்கின்றேனே தவிற அது வெளிநாட்டினரால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லவில்லை. அதன் காரணம்தான் அந்நிய நாட்டினரின் கலாசார தாக்கத்தால் நம்மிடமிருந்து மறைந்துவிட்டதாக சொல்லியி ருக்கின்றேன். கவனமாக நீங்கள் எடுத்துப்போட்ட பத்தியை மீண்டும் வாசிக்கவும். நன்றி.
வாழ்க வளமுடன்
ஐயா,
எந்த வேதத்தில் சைவ உணவுப் பற்றி சொல்லியிருக்கிறது?
இரா. பானுகுமார்,
சென்னை.
எனக்கு எந்த வேதத்தில் என்றெல்லம் தெரியாது ஐயா. ஆனால் புலால் உண்பது தவறான பழக்கம் நம் நாட்டில் ஒரு பகுதியினரிடம் பழக்கமாக வாழ்க்கை ஒழுக்கமாக வழங்கப்பட்டுவருகின்றது. சித்தர்களும் அதையே வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பல தமிழ் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ஐயா கோவி.கண்ணன் சொன்னது போல குறளில் புலால் மறுத்தல் குறித்து வள்ளுவப்பெருமான் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாடல்கள் கேட்டால் கொடுக்க சித்தமாயிருக்கின்றேன். ஆனால் வேதங்கள் குறித்த எனது அறிவு பூச்சியம்தான்.
Sir,
I can understand your attitude of propogating vegetarianism. But I dont think the following statements have any scientific truth:
//இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஆடு, மாடு, கோழி போன்ற உயிரிணங்களுக்கும் 5 உணர்வுகள் உண்டு. அவை அனைத்தையும் கருமையத்தில் சேமித்துக்கொண்டே வரும். பலியிடப்படும் உயிரின் கடைசி மரண உணர்வுகளும் கருமையத்தில் பதிவாகும். அதே வேகத்தில் அதன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பதிவாகும். நீங்கள் அந்த உணர்வுள்ள உயிரிணத்தினை புசிக்கும்போது அந்த பதிவுகள் நீக்கம் பெற்றிருக்காது. ஏனெனில் அனைத்தும் அலைவடிவிலேயே இருக்கும். அதன் காரணமாக அவற்றின் பதிவுகள் உங்களுள்ளும் இறங்கி பாவப்பதிவாக உங்கள் கருமையத்திலும் பதிவாகும்.
//
//ஆனால் மரம் செடி கொடிகளும் உயிர்னம்தானே என்று சிந்திக்கலாம்.மரத்தின் கருமையம் வேராக இருக்கிறது. நீங்கள் காய்கனிகளை பறிக்கும்போது அந்த மரத்தின் வேதனையானது கருமையத்தில் இறங்கும். அதுவும் பூமியோடு தொடர்புகொண்டிருப்பதால் உடனடியாக பூமிக்கு கடத்தப்படும்(எர்தாகிவிடும்). கீரையை வேரோடு பிடுங்கும்போதும் அது தன் உணர்வுகளை உடனடியாக பூமிக்கு கடத்திவிடுகிறது. எனவே சைவ உணவு வகைகளின் உணர்வுகள் பூமிக்கு கடத்தப்படுவதால் பாவ பதிவுகள் அதை சுவைப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. //
The brain stores your experience and your feelings. So if we skip the brain, are we safe to eat Non-veg?
எண்ணங்களின் பதிவுகள் மற்றும் அனுபவங்கள் மூளை அணுக்களில் மட்டும் பதியப்படுவதில்லை. உடல் செல்களில், உயிர்த்துகளில், வித்து செல்களில், ஜீவகாந்த களத்தில், வான் காந்தத்தில் பதிவாகித் தக்க காலத்தில் தனக்கும் தனது வித்துவழித்தோன்றும் சந்ததிகளுக்கும் தக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நமது ஜனன மையம் என்றழைக்கப்படும் கருமையம் தான் அதில் பிரதானம். அது மூளையில் இல்லை. உடலின் மையத்தில் இருக்கின்றது. காரணம், அணுக்களின் அலையியக்கமே விண் முதலான பஞ்ச பூதங்கள். அவை சுழலலையாகவே ஏற்படுகின்றது. விண் முதலான பஞ்ச பூதங்களின் கூட்டே இந்த உடம்பு. அதனால் உடலில் உள்ள ஜீவகாந்தம் மற்றும் அணுக்கள் எல்லாமே சுழல்கின்றன. சுழலும்போது அது தானாகவே ஒரு மையத்தை ஆதாரமாக கொண்டு சுழலும் அது தான் உயிர்னங்களின் உடலில் ஜீவ காந்த மையம். இவ்வாறு சுழலும் அணுக்கள் இறைவெளி எனப்படும் வெற்று வெளியுடன் உராய்ந்து காந்த அலைகளை உற்பத்தி செய்கின்றன. அந்த காந்த அலைகள் கருமையத்தில் உள்ள பதிவுகளை சூழல் மற்றும் மன ஓட்டத்திற்கு தக்கவாறு அலைவடிவிலேயே மூளைக்கு கொண்டு சென்று அங்குள்ள செல்களுடன் செயல்புரிந்து நமக்கு எண்ணங்களை தோற்றுவிக்கின்றன. அந்த கருமையம் எங்கு எப்படி அமைந்துள்ளது என்று ஆராய்ந்து அவற்றை எவ்வாறு நீக்கி நாம் உணவை கொள்வது?
நீங்கள் அறிவியல் ரீதியில் சிந்திக்கும் போது இவையெல்லாம் எவ்வாறு சாத்தியம் என்று கேட்கின்றீர்கள். சிந்தனைக்கென்று சில கேள்விகளை கேட்கிறேன்.
மனித உடல் எவ்வாறு உணர்வுகளை பெறுகின்றன?
மனம் எங்கு எவ்வாறு அமைந்துள்ளது?
எண்ணம் எங்கு தோன்றுகிறது?
நமது மூளை செல்களில் பதிந்துள்ள எண்ணங்கள் மற்றும் அனுபவங்கள் எப்படி தன்மைகளாக ஜீன்களில் உட்பொதியப்பட்டு நமது வாரிசுகளுக்கு வித்து வழியாக செல்கின்றன? ஏனெனில் அவை உடலை விட்டு வெளியேறும்போது மூளையுடனான தொடர்பை இழந்துவிடுகின்றதல்லவா?
மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களின் சிறப்பே,
அவர் எதையும் விஞ்ஞானப் பார்வை
கொண்டு நோக்கியதும், அவர் பொதுமை எண்ணங்கள் கொண்டவராகவும் திகழ்ந்தது தான்.
தமிழில் எளிய கவிதைகளையும். எல்லோருக்கும் புரியும்படி மிகச் சாதாரணமாக இயற்றும் புலமை பெற்றிருந்தார் அவர்.
அவர் வாழ்ந்த காலத்தில், நாம் வாழ்ந்ததே நமக்குப் பெருமை.
அவர் கருத்துக்களைப் பரப்பும்
உங்களுக்கு எல்லா நன்மைகளும்
உண்டாகட்டும்.
வாழ்க, வளமுடன்!
நல்ல பதிவு, நல்ல கல்வி, நன்றாகவும் இருந்தது பின்னூட்டங்களில் உங்கள் வாதம்!
வாழ்க வளமுடன்.
My thoughts on eating veg & non-veg
Non-veg - you kill the animal and thats the end of it.
Veg - You eat the part of the tree or plant but the rest grows and continue to give new parts
(greens - you can eat the leaves and plant the root again to grow it)
Also eating sick animals causes harmful diseases.
Post a Comment