ஆசை சீரமைத்தல்
எல்லோரும் ஆசைகளை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் வழிமுறை சொல்பவர் யார்? இங்கு ஆசையை குறைக்கசொல்வதற்கு பதிலாக மகரிஷி அவர்கள் ஆசையை முறைப்படுத்த சொல்கிறார். அதுவும் வழி முறையோடு. எப்படி?
அதற்கு தினம்தோறும் மனதை ஆராய வேண்டும். மனதில் ஆசை எழும்போதே நமக்கு நாமே சில கேள்விகளை கேட்கவேண்டும். அவை,
அந்த அசையினால் நமக்கோ மற்றவருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ ஏதேனும் தீமை ஏற்படுமா? எனில் அதை அப்பொழுதே விட்டொழிக்கவேண்டும்.
அந்த ஆசையை நாம் அனுபவிக்கும் அளவுக்கு நமக்கு உடல்வலிமை, ஆயுள் நீளம், சுற்றுச்சூழல் முதலியவை ஒத்துழைக்குமா என்று நோக்கவேண்டும். இல்லை என்று மனதிற்கு தோன்றினால் அந்த ஆசையையும் நீக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் நாம் ஆசை ஏற்படும்போதே ஆராய்ந்தால் நம்முடைய ஆசைகள் பல என்றிருந்த நிலை மாறி சில என்றாகிவிடும். அவற்றையும் மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒன்று என்றாகிவிடும். இப்பொழுது மனம் லேசாக உணரும். அதனால் அந்த ஒரு ஆசையை நோக்கியே மனம் சிந்தித்து சிந்தித்து அந்த ஆசையை அடைய எல்லா வழிமுறைகளையும் தேடும். அவற்றில் சிறந்ததை நாம் தீர்மாணித்து அந்த திசையை நோக்கி நாம் நடைபோட்டால் வெற்றி நிச்சயம். அந்த ஆசையும் நிறைவேறி மனதில் ஆசைகள் முடிவுபெற்று நிறைவு பெறும். அப்பொழுது மேலும் நாம் லேசாக இருப்பதை உணர முடியும்.
இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிரமமாக தோன்றினாலும் சிறிது சிறிதாக பழகப்பழக நாம் இதை பழக்கமாக்கிவிடலாம். அப்பொழ்து நம்மை அறியாமலேயே நாம் நமது ஆசைகளை ஆராய்வோம். இதற்கு ஆசை ஆராய்தல் என்று தலைப்பு கொடுத்துள்ளார் நமது குரு வேதாத்ரி அவர்கள்.
இதில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ஒரு ஆசையை அடையும் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கும்போது புதிய ஆசைகள் மனதில் தோன்றினால் நம்மனமே அதை அநாயாசமாக ஒதுக்கி தனது வாழ்க்கை நோக்கமாக ஒரே குறிக்கோளை நோக்கி வீறு நடைபோடும். அதே நேரத்தில் நாம் நமது செயலில் சில செக் பாயிண்டுகளும் வைத்துக்கொள்ளவேண்டும். அவை இந்த செயலில் நாம் இந்த நிலையை அடைந்தால் இது சரியான பாதை என்பதற்கான ஒரு வழிகாட்டியாகு. பாதை சரியானதாக இருந்தால் பயணமும் சரியாக இருக்கும். நாமும் வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment