சைவம், அசைவம் - எது சிறந்தது?
இதற்கு ஜீவன்களின் கருமையம் பற்றிய விளக்கம் பெற்றிருத்தல் தகுதியாகும். கருமையம் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் உடலின் மையத்தில் அமைந்திருக்கும். இது கணினியின் Hard Disk - ஐ போன்றது. அதுபோலவே பணிபுரியவும் செய்யும். அதன் வெளியீடே ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்பாலுக்கு விந்தணுவாகவும், பெண்பாலுக்கு முட்டையாகவும் வெளிப்படும். இவை இணைந்தே இன்னொரு உயிர் தோன்றும். இதன் பதிவுகளுடன் கூடிய வெளியீட்டினை நவீன மருத்துவம் ஜீன்கள் என்றழைக்கிறது.
அப்படிப்பட்ட மகத்தான சக்தி படைத்த கருமையத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், துய்க்கும் ஒவ்வொரு செயலும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. எப்படி ஒரு மாட்டினை பார்த்தபார்வையில் அது மனதில் பதிந்து எவரேனும் மாடு என்ற உடன் அது விரைவாக மனதில் உருவம் பெறக்கூடிய அதிசயம் நடக்கிறது? சிந்திப்பீர். உங்கள் ஒவ்வொரு அனுபவமும் அலை வடிவத்தில் மாற்றம்பெற்று சுருக்கம்பெற்று கருமையத்தில் பதிந்து நீங்கள் நினைக்கும்நொடியில் அது உருவமும் அல்லது அந்த அனுபவம் அதே தன்மைகளுடன் உங்களுக்கு உள்ளுணர்வாக மலரும்.
இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஆடு, மாடு, கோழி போன்ற உயிரிணங்களுக்கும் 5 உணர்வுகள் உண்டு. அவை அனைத்தையும் கருமையத்தில் சேமித்துக்கொண்டே வரும். பலியிடப்படும் உயிரின் கடைசி மரண உணர்வுகளும் கருமையத்தில் பதிவாகும். அதே வேகத்தில் அதன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பதிவாகும். நீங்கள் அந்த உணர்வுள்ள உயிரிணத்தினை புசிக்கும்போது அந்த பதிவுகள் நீக்கம் பெற்றிருக்காது. ஏனெனில் அனைத்தும் அலைவடிவிலேயே இருக்கும். அதன் காரணமாக அவற்றின் பதிவுகள் உங்களுள்ளும் இறங்கி பாவப்பதிவாக உங்கள் கருமையத்திலும் பதிவாகும்.
இப்பொழுது புரிகிறதா பெரியவர்களின் பொன்மொழி கொன்றால் பாவம் தின்றால் போச்சு (உங்கள் கருமையத்திற்குள் போச்சு).
ஆனால் மரம் செடி கொடிகளும் உயிர்னம்தானே என்று சிந்திக்கலாம்.மரத்தின் கருமையம் வேராக இருக்கிறது. நீங்கள் காய்கனிகளை பறிக்கும்போது அந்த மரத்தின் வேதனையானது கருமையத்தில் இறங்கும். அதுவும் பூமியோடு தொடர்புகொண்டிருப்பதால் உடனடியாக பூமிக்கு கடத்தப்படும்(எர்தாகிவிடும்). கீரையை வேரோடு பிடுங்கும்போதும் அது தன் உணர்வுகளை உடனடியாக பூமிக்கு கடத்திவிடுகிறது. எனவே சைவ உணவு வகைகளின் உணர்வுகள் பூமிக்கு கடத்தப்படுவதால் பாவ பதிவுகள் அதை சுவைப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. பூமியும் ஒரு உணர்வற்ற பொருள் என்பதால் அந்த துன்ப அலைக்கு மதிப்பு நடுநிலைப்படுத்தப்படுகிறது.
இதுதான் சைவ உணவை நம் நாட்டு அறிவியலறிஞர்கள் வேதங்களில் எழுதியும், நம் வாழ்க்கை கலாச்சாரத்தில் மறைமுகமாக புகுத்தியும் வைத்திருப்பதன் காரணமாகும். காலப்போக்கில் பல்வேறு அந்நிய படையெடுப்புகள் மற்றும் நாகரீக சிந்தனை என்கிற பெயரில் புறப்பட்டவர்களின் பிரசாரங்களாலும் இந்த காரணம் நம்மிடமிருந்து காணாமல் போய்விட்டது.
மரத்தின் கருமையம் விதைகளில் இருக்கிறதே என்று சந்தேகம் தோன்றலாம். விதைகளில் மரத்தின் கருமையம் இருப்பின் மரம் விதை நீக்கம் பெற்ற உடன் மரணித்துவிடும். அதே நேரத்தில் ஒரு உயிரிணத்திற்கு ஒரு கருமையம் மட்டுமே இயற்கையில் அமையும்.
இதற்கு டெஸ்ட் ட்யூப் பேபி உதாரணம் மூலம் விளக்கமளிக்க முயல்க்கிறேன். ஆணின் கருமையம் விந்துவிலும், பெண்ணின் கருமையம் முட்டையிலும் இருப்பதாக கொண்டால் அவர்கள் விந்துவையும், முட்டையினையும் வெளியில் சோதனைக்குழாயில் இணைக்க மனித உடலிலிருந்து வெளியே எடுத்தால் உடனே மனிதன் இறந்துவிடுவான். ஆனால் ஏன் மரணிக்கவில்லை, மனிதனின்(ஆண் பெண் இருபாலரையும் குறிப்பதாக கொள்ளவும்) சாரமான விதையை மட்டுமே(அதாவது மனித ஜீன்களை - தன்மைகளை) உபயோகித்து சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்குகின்றனர். இதனால் மனிதன் மரணிப்பதில்லை. அதுபோலதான் விதைக்கும் வேருக்கும் உள்ள தொடர்பும் கருதப்படவேண்டும்.