Wednesday, April 11, 2007

இன்று ஒரு சிந்தனை

இறைவழிபாட்டின் மதிப்புணர்ந்த முதற் காலத்தில் ஆன்மீகத் துறையில் சிந்தனை செலுத்திய மகான்கள் அகத்தவத்தின் மூலம் மெய்ப் பொருள் கண்டார்கள். அதை மொழி விளக்கம் செய்த போது அது வேதாந்தம் ஆயிற்று.

அக்காலத்தில் அறிவில் போதிய வளர்ச்சி பெறாத மக்களுக்கு பக்தி வழி போதனை தொடங்கியது. இறைவனை தனித்த சன்னியாசியாகக் காட்டி அதற்கு ஏற்ற உருவம் கற்பித்து வணங்கச் செய்தார்கள்.

மத்திய காலத்தில், பக்தி வழியில் இறைவழிபாடு மாற்றம் பெற்றது. மனிதனுடைய மன இயல்பை வைத்துக் கடவுளைக் கற்பித்தார்கள். தனியாக இறைவனுக்குச் சிலை வைத்து வணங்குவது சிலருக்குப் பொருந்தவில்லை. இறைவன் தனியாக இருந்ததைக் கண்டு பரிதாபப்பட்டார்கள். இறைவனுக்கு அருகில் சக்தியை வைத்து வணங்குவதற்கு முற்பட்டார்கள். தெய்வங்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மத்திய கால பிற்பகுதியில் தெய்வங்களைப் பழிவாங்க நினைத்தார்கள் சிலர். மனிதன் குழந்தைகளைப் பெற்று படும்பாட்டைத் தெய்வமே பட்டுப் பார்க்கட்டும் என்ற கருத்தில் தெய்வங்களுக்குப் பிள்ளைகளை உருவாக்கினார்கள்! தற்கால விஞ்ஞான யுகத்தில் பக்தி மார்க்கத்தில் ஒரு புதுமை மலர்ந்தது. கடவுள்களுக்கு அலங்காரம், பொன், வைர நகைகளும், வாண வேடிக்கை முதலியனவும் கூட்டப் பெற்றன.

காலத்திற்கு ஏற்ப தெய்வங்களுக்கு ஆடைகளும் மாற்றப்பட்டன. முதற்காலத்தில் காட்டு மிருகங்களின் தோல்கள் உடுத்தப்பட்டன. பிறகு நார் பட்டு உடைகள் உடுத்தப்பட்டன. இக்காலத்தில் நைலான் துணிகள் அணியப்பட்டு வருகின்றன. மனிதனைப் படைத்த கடவுள் மனிதனுக்கு அறிவாற்றலை அளித்தது. அறிவில் திசைமாறிய மனிதன் தெய்வத்தையே அல்லலுக்கு உள்ளாக்கி விட்டான். தெய்வமே தானாகவும் உள்ளது என்ற உண்மையைப் பெரும்பாலோர் உணரும் வரையில் மனிதன் படும்பாடெல்லாம் தெய்வம் படுவதாகக் காட்டும் நகைச்சுவை (humorous) நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.

--யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

6 comments:

அக்னி சிறகு said...

அமைதி அடைவோம்


இதுவரையிலும் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன், இப்படி ரசிக்கக் கூடியவனும், எண்ணக் கூடியவனுமான என்னை ஆக்கியவன் யார் என்று தன்னையே திரும்பிப் பார்க்கிறான் பாருங்கள். இதுதான் ஆறாவது அறிவு. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்நிலை ஆறாவது அறிவு.

கடலில் இருந்த தண்ணீர் தான் மேகமாகி மழையாகப் பொழிகிறது. அருவியாக, ஆறாக ஓடும் தண்ணீர் மீண்டும் எங்கே சென்று சேர்கிறது? கடலில் தானே? குளமாக, ஏரியாக அந்த நீரைத் தேக்கி வைத்தாலும் புடைத்துக் கொண்டே இருக்கும் அது. கரை உடைந்தால் தன் மூலமான கடலை நோக்கியே விரைந்தோடும். கடலை அடையும்வரை அதற்கு ஓய்வு, அமைதி இல்லை.

இதுபோன்றே, மெய்ப்பொருளே (பிரம்மமே) அணுவாக, பஞ்ச பூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. அவையெல்லாமே இடைநிலை தான். இனி மனிதன் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை, தான் பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது. எதை அடைய வேண்டுமோ அதை அடையாதவரை வேறெது கிட்டினும் மனக்குறை மனிதன் உள்ளத்தில் தலையெடுத்துக் கொண்டே தான் இருக்கும். அடைய வேண்டியதை அடைந்து அமைதி பெறுவோம்.
- Show quoted text -

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

--~--~---------~--~----~------------~-------~--~----~
உலகை அன்பினால் வெல்வோம்

அன்பு குழுமம்
இணையம் வழியே இணையும் வழி
-~----------~----~----~----~------~----~------~--~---

அக்னி சிறகு said...

this a very nice one

K.R.அதியமான் said...

sorry for my english typing ;
do you have the ponmozhihal of Swamiji, which i found in Ramaraj Vesti banners : Uravugal Membada..
some 15 points.

if it is available in digital format, pls publish in your site.
i have been searching for it in
http://www.vethathiri.org/aliyar
in vain..

thanks

அக்னி சிறகு said...

அதியமான் அவர்களே,
உங்கள் விருப்பம்போலவே பதிகின்றேன். விரைவில் எதிர்பாருங்கள். பதிந்த பின்னர் உங்களுக்கு ஒரு தனி பதிவு அஞ்சலில் அனுப்புகிறேன்.

ஜீவி said...

'உறவுகள் மேம்பட" என்று நீங்கள்
குறிப்பிட்டிருபது தானே, திரு.அதியமான் கேட்டிருப்பது? இல்லை, வேறேயா?..

அக்னி சிறகு said...

ஜீவி ஐயா,
அதுதான் அவர் கேட்டது. ஆனால் பதிந்த பிறகு அவரின் பதில் "இது பகுதி மட்டுமே. முழுமையான பதிவு இன்னமும் இருக்கின்றது" என்பது. நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைத்தவுடன் நிச்சயம் பகிர்கிறேன்.

வாழ்க வளமுடன்